» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா ஆய்வு

வெள்ளி 20, ஜூன் 2025 5:37:39 PM (IST)



மாத்தூர் தொட்டிப்பாலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் மேம்படுத்தும்பணி, கல்குளம் வட்டம் தக்கலை புதிய பேருந்து நிலைய பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட காண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் பணிகள் அறிவித்துள்ளார்கள். 

அதனடிப்படையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் அருவிக்கரை ஊராட்சி பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5.37 கோடி மதிப்பில் பரளியாற்றின் குறுக்கே மாத்தூர் – முதலார் வரை கட்டப்பட்டு வரும் பாலப்பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்ததாரர் மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதனைத்தொடர்ந்து அயக்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.4.54 கோடி மதிப்பில் மலவிளை அருகே பரளியாறு குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலப்பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்ததாரர் மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 2023-24 சார்பில் பத்மநாபுபரம் நகராட்சிக்குட்பட்ட தக்கலை புதிய பேருந்துநிலையம் கட்டுவதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.39 கோடி மதிப்பில் பேருந்துநிலைய பணிகள் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையத்தின் மொத்த இடத்தின் பரப்பளவு 4359 சதுர மீட்டர் ஆகும். இதில் தரைத்தளம் 602.50 சதுர மீட்டர் மற்றும் முதல்தளம் 602.50 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டிடம் கட்டப்பட உள்ளது. புதிதாக கட்டப்படவுள்ள பேருந்து நிலையத்தில் 11 பேருந்துகள் நிறுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 6 எண்ணிக்கையிலான 4 சக்கர வாகனம் மற்றும் 110 எண்ணிக்கையிலான இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தரைத்தளத்தில் ஒரு உணவு விடுதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை, நேரகாப்பாளர் அறை, இலவச கழிப்பறை கட்டண கழிப்பறை ஒன்றும் மற்றும் 15 கடைகள் கட்டப்பட உள்ளது. முதல் தளத்தில் 16 கடைகளும் ஒரு பொருட்கள் வைப்பு அறையும், ஓய்வறை ஒன்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு கழக அலுவலகம், ஒருங்கிணைப்பு அறை ஒன்றும் மற்றும் வைப்பு அறை ஒன்றும், கட்டிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் பேருந்து நிலைய பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடித்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஆய்வில் ஊரக வளர்ச்சிமுகமை திட்ட இயக்குநர் பாபு, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல் குமார், பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர், துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory