» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துறைமுகத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 20, ஜூன் 2025 5:13:36 PM (IST)

மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய துறைமுகங்களில் நடைபெற்று வரும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள், ஊதிய முரண்பாடுகளை களைதல், துறைமுகங்களில் மேற்கொள்ளப்படும் தனியார்மய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஹெச்எம்எஸ், ஹெச்எம்எஸ் (ஒர்க்கர்ஸ்), சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி சார்பில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் கன்வீனர் ஆர்.ரசல் தலைமை தாங்கினார். துறைமுக ஆணையக்குழு உறுப்பினர் துறைமுகம் சத்யா முன்னிலை வகித்தார். துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சிஐடியு பொதுச்செயலாளர் கே.காசி, செயலாளர் ஆறுமுகநயினார்,பொருளாளர் மீனாட்சி சுந்தரேசன், போர்ட் மெரைனர்ஸ் அன்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன், ஹெச்எம்எஸ் தலைவர் ஆரோக்கியராஜ், செயல் தலைவர் இப்ராகிம், போர்ட் யுனைடெட் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் ஜாண் கென்னடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)











D.thilipJun 20, 2025 - 10:37:38 PM | Posted IP 104.2*****