» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 20, ஜூன் 2025 4:46:44 PM (IST)

தந்தையை விறகு கட்டையால் தாக்கி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே சோனகன்விளை, மேலத் தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் முத்து (83/2022). இவரது மனைவி ரோஜா. இந்த தம்பதிக்கு 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். இதில், 2வது மகன் சுடலைமணி (48), என்பவர் அவரது மனைவியை கடந்த 2020ல் கொலை செய்த வழக்கில் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையி்ல அடைக்கப்பட்டார். 

இதனிடையே கடந்த 2022ஆம் ஆண்டு ஜாமீனில் வந்த அவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர் கடந்த 08.06.2022 அன்று 2வது மனைவியுடன் சொந்த ஊரான சோனகன்விளைக்கு வந்த அவர், தந்தையிடம் சொத்தை பிரித்து தரும்படி கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் மறுத்ததால் அங்கிருந்த விறகு கட்டையால் தந்தையை தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற தாயார் ரோஜாவையும் தாக்கியுள்ளார். 

இதில் படுகாயம் அடைந்த தந்தை முத்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து சுடலைமணியை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், குற்றவாளியான சுடலைமணிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.3ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எல்லம்மாள் ஆஜரானார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory