» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கள் இறக்கிய சீமானை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

வெள்ளி 20, ஜூன் 2025 4:02:32 PM (IST)

கள் இறக்கிய சீமான் மற்றும் அவருடன் பங்கேற்றவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்றையில் அளித்த பேட்டி: கடந்த 15ம் தேதி, துாத்துக்குடி மாவட்டம், பெரியதாழையில், கள் இறக்கிய சீமான் மற்றும் அதில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சீமானை கைது செய்ய வேண்டும். இல்லையெனில், இது சமூகத்தில் போக்கிரித்தனத்தையும், பொல்லாத விஷயங்களையும் ஊக்கப்படுத்துவதாக அமைந்து விடும்.

தமிழ்த்தேசியம் பேசிவிட்டு, கள் தேசியத்தையும், சாராய தேசியத்தையும் உருவாக்க சீமான் முயல்கிறார். இனி தமிழகத்தில் எந்த இடத்திலாவது சீமான் கள் இறக்கினால், கள் பானைகளை உடைக்க, 100 அரிவாளோடு சிலர் தயாராக இருக்கின்றனர். கள் இறக்குவோருக்கு பாதுகாப்பு கொடுக்க, அரிவாளை ஊருக்குள் துாக்கினால், கள் பானைகளை உடைக்க, 100 அரிவாளை ஊருக்குள் துாக்கினால் நிலை என்னவாகும்.

சீமான் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் அல்லது திருத்தப்படுவார். கள் இறக்கிய சீமான் மற்றும் அவருடன் பங்கேற்றவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; இல்லையென்றால், நாங்கள் அடுத்தகட்டம் நோக்கி செல்வோம். போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும். சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.


மக்கள் கருத்து

truthJun 21, 2025 - 08:02:07 AM | Posted IP 104.2*****

stupid idiot, shut up

மக்கள்Jun 21, 2025 - 06:40:54 AM | Posted IP 172.7*****

யாரு அந்த கிறுக்கு சாமி?

அன்புJun 20, 2025 - 08:30:37 PM | Posted IP 162.1*****

வாய என் தெய்வமே ஒருத்தன் விடாமல் துரத்தனும் அதுக்கு நீங்க தான் சரியான ஆளு சிங்கம் களம் இறங்கிடுச்சு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education

New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory