» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கம்

வெள்ளி 20, ஜூன் 2025 3:07:30 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் யார்டு பராமரிப்பு பணி காரணமாக ஜுன் 23ந் தேதி முதல் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லையிலிருந்து இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தாம்பரத்தில் இருந்து வருகிற ஜுன் 22-ந்தேதி முதல் ஜுலை 21 ந் தேதி வரை இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 20691 நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு ள்ளது. 

மேலும் வருகிற ஜுன் 23 ந் தேதி முதல் ஜுலை 22 ந் தேதி வரை அந்தியோக்கியா எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 20692 திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5:10 மணிக்கு புறப்பட்டு சென்னை தாம்பரம் செல்கிறது.

மேலும் வருகிற ஜுன் 21 ந் தேதி முதல் ஜூலை 22 ந் தேதி வரை  சென்னையிலிருந்து நாகர்கோவில் வருகிற 3 ரயில்கள் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடைபெறுகிற யார்டு பராமரிப்பு பணி காரணமாக கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மாலையில் புறப்பட்டு நாகர்கோவில் ரயில் நிலையம் வந்து பின்னர் சென்னை தாம்பரம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடைகிறது‌. இவ்வாறு தென்னக ரயில்வேயின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors


CSC Computer Education



Thoothukudi Business Directory