» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன் : தூத்துக்குடியில் இன்பதுரை எம்பி பேட்டி!
வெள்ளி 20, ஜூன் 2025 12:21:17 PM (IST)
தூத்துக்குடி, நெல்லை, குமரி உட்பட ஒட்டு மொத்த தமிழகத்திற்கு சேர வேண்டிய உரிமைகளை மீட்டெடுக்க குரல் கொடுப்பேன் என்று மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை தெரிவித்தார்.
அதிமுக எம்பி யாக பொறுப்பேற்ற இன்பதுரை விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு அதிமுக வழக்கறிஞர் பிரிவு மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் ஒரு சாமானியன் ஒரு எளிய தொண்டனுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய எடப்பாடியாருக்கும் என்னை முன்மொழிந்த மூத்த தலைவர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கூட்டணி கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எல்லோருக்கும் நன்றி.
பாராளுமன்ற மேலவை உறுப்பினர் என்ற பொறுப்பை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். திமுக அரசு பறிகொடுத்த தமிழகத்திற்கு சேர வேண்டிய உரிமைகளை மீட்டெடுப்பேன். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உட்பட அனைத்து மாவட்டங்களில் ரயில் மிகவும் குறைவாக இருக்கிறது. சென்னை செல்வதற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்ட பின்பும் இந்தப் பகுதி ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலை இருக்கிறது.
அந்த நிலையை மாற்றி அதுபோக ரயில்வே கோட்டத்தை திருநெல்வேலியில் அமைப்பதற்கு குரல் கொடுப்பேன். குறிப்பாக திமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கக்கூடிய ராதாபுரம் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த குரல் கொடுப்போம். புரட்சி தலைவி அம்மா சாத்தான்குளம் இடைத்தேர்தலின் போது அறிவித்த தாமிரபரணி நம்பியார் கருமேனி ஆறு இணைப்பு திட்டத்தை திட்டம் துவங்கி வைக்கப்பட்டு இருக்கிறது என சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் தண்ணீர் வரவில்லை இதற்கு என்ன காரணம் என தெரியவில்லை ஸ்டிக்கர் ஒட்டும் அரசு அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. இந்த திட்டம் முழுமையாக முடிவடைவதற்கு ஒரு துணையாகவும் இருப்பேன். குறிப்பாக வஞ்சிக்கப்பட்டு இருக்கக்கூடிய தமிழகத்திற்கு இன்னும் ஒரு 237 நாளில் எடப்பாடி முதல்வராக பதவி ஏற்க போகிறார். அந்த தருணத்தில் இந்த பகுதியில் அதிக வாக்குகளை பெறுவதற்கு அதிமுக அதிக வாக்கு பெறுவதற்கு உறுதுணையாக இருப்பேன் என தெரிவித்துக் கொள்கிறேன் இன்பதுரை கூறினார்.
மேலும், டிஆர்பி ராஜா முன்னாள் முதலமைச்சர், கழகப் பொதுச் செயலாளர் குறித்து கேவலமாக சித்தரித்து கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புகார் மனு அளித்து வருகிறாேரம். சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக இருந்தால் நடவடிக்கை எடுப்பார்கள்.
இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது நீதிமன்றம். எப்படி கள்ளக்குறிச்சியில் 70 பேர் மரணத்திற்கு நீதி கிடைக்காத நிலையில் இருந்த போது அதிமுக தான் நீதிமன்றத்தின் நாடி விசாரணை கேட்டு புரட்சி தமிழர் எடப்பாடி யார் தான் வெற்றியை பற்றி தந்து இன்று அங்கு நீதி கிடைத்திருக்கிறது அதுபோல் நீதிமன்றம் செல்லவும் தயாராக இருக்கிறோம் இன்பதுரை கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










