» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்குகள் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலி
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:55:59 AM (IST)
ஆறுமுகநேரி அருகே 2 மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி அருகேயுள்ள தலைவன்வடலியை சேர்ந்தவர் பொன்சந்தனராஜ் (17). இவர் நாலுமாவடியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்தமாதம் நடந்து முடிந்த அரசு பொதுத்தேர்வை எழுதிய அவர் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இவரது தாயார் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு திருச்செந்தூர் கோவிலுக்கு வேலைக்கு சென்ற தனது தாயாரை மோட்டார்சைக்கிளில் ஏற்றி கொண்டு சாகுபுரம் பஸ்நிறுத்தத்தில் இறக்கி விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே, ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளியான செல்வராஜ் மகன் ஜான்பால் (35), அதே பகுதியைச் சேர்ந்த யூனுஸ் மகன் நிகில் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் ஆத்தூரில் கட்டிட வேலையை முடித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை ஜான்பால் ஓட்டியுள்ளார்.சாகுபுரம் அருகே வந்தபோது கண்இமைக்கும் நேரத்தில் பொன்சந்தனராஜ்(17) ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும், ஜான்பால் ஓட்டிய மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்கள் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்துள்ளனர்.
இதில் படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கிடந்த பொன் சந்தனராஜை காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் காயங்களுடன் மீட்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங், ஜான் பால் ஆகியோர் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொன் சந்தனராஜ் நேற்றுமுன்தினம் காலையில் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் குடிநீர் திட்டப் பணிகள் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
சனி 12, ஏப்ரல் 2025 8:03:54 PM (IST)

பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
சனி 12, ஏப்ரல் 2025 7:59:19 PM (IST)

காவல்துறை சார்பாக சைபர் ஹாக்கத்தான் போட்டி: எஸ்பி ஆல்பர்ட் ஜான் பரிசு வழங்கினார்
சனி 12, ஏப்ரல் 2025 5:48:23 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம்
சனி 12, ஏப்ரல் 2025 5:00:17 PM (IST)

விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு ஏப்.19ல் விடுமுறை அறிவிக்க ஆசிரியர்கள் கோரிக்கை!
சனி 12, ஏப்ரல் 2025 4:42:21 PM (IST)

தூத்துக்குடி பள்ளியில் நிழல் இல்லா நேரம் செயல் விளக்க பயிற்சி!
சனி 12, ஏப்ரல் 2025 3:13:39 PM (IST)
