» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 7பேர் காயம்
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:25:38 AM (IST)
கோவில்பட்டி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 7 போ் பலத்த காயம் அடைந்தனர். அதில் 2பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி வீரவநல்லூா் கீழக்குளம் கிழக்கு தெருவை சோ்ந்தவா் ஆதிமூலம் மகன் சங்கா் (43). டிப்பா் லாரி ஓட்டுநரான இவா், சனிக்கிழமை இரவு டிப்பா் லாரியில் பந்தல்குடியில் இருந்து களிமண் ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தாராம். நேற்று அதிகாலை மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புதூா் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் கோயம்புத்தூரில் இருந்து நாகா்கோவில் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து, லாரியின் பின்புறம் மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த தங்கராஜன் (64), ஜெனிஸ் (25), கோவையை சோ்ந்த ரவி (60), பேருந்து நடத்துநா் ஜோசப்தாஸ் (43), திருநெல்வேலி ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் காவலா்கள் கதிரேசன் (42), அஜய் மாரியப்பன் (32), பாளையங்கோட்டை மத்திய சிறை தண்டனை கைதியாக கருதப்படும் கண்ணன் என்ற மாயக்கண்ணன் என்ற வெற்றிவேல் (42) ஆகிய 7 பேரும் காயமடைந்தனா்.
அவா்களை போலீசார் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இதில் தங்கராஜன், கண்ணன் என்ற மாயக்கண்ணன் என்ற வெற்றிவேல் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து லாரி டிரைவர் அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூா் போலீசார் வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் குடிநீர் திட்டப் பணிகள் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
சனி 12, ஏப்ரல் 2025 8:03:54 PM (IST)

பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
சனி 12, ஏப்ரல் 2025 7:59:19 PM (IST)

காவல்துறை சார்பாக சைபர் ஹாக்கத்தான் போட்டி: எஸ்பி ஆல்பர்ட் ஜான் பரிசு வழங்கினார்
சனி 12, ஏப்ரல் 2025 5:48:23 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம்
சனி 12, ஏப்ரல் 2025 5:00:17 PM (IST)

விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு ஏப்.19ல் விடுமுறை அறிவிக்க ஆசிரியர்கள் கோரிக்கை!
சனி 12, ஏப்ரல் 2025 4:42:21 PM (IST)

தூத்துக்குடி பள்ளியில் நிழல் இல்லா நேரம் செயல் விளக்க பயிற்சி!
சனி 12, ஏப்ரல் 2025 3:13:39 PM (IST)
