» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் அமைக்க பா.ஜ.க. கோரிக்கை!

வெள்ளி 4, ஏப்ரல் 2025 7:49:51 PM (IST)



நாசரேத்தில் பழைய கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பா.ஜ.க. ஆழ்வார்திருநகரி மண்டல் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி அனுப்பியுள்ள மனுவில் "நாசரேத் பேரூராட்சி பகுதியில் மிகவம் பழமையான கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இதன் மேற்கூரை ஓடுகளால் அமையப்பட்டுள்ளது. 

அந்த கட்டிடத்தின் உறுதிதன்மை சரியில்லாத காரணத்தினால் ஆபத்து நேரிடக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கும் அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர். சிறியவர்கள் பெரியவர்கள் மற்றும் முதியோர்கள் பலதரப்பட்ட மக்கள் வரக்கூடிய இந்த இடம் மிகுந்த மோசமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் விளக்கு கூட எரிவது கிடையாது. 

இதில் சில மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு பாட்டிலை காம்பவுண்டுக்குள் போட்டு செல்கின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இதனை பார்வையிட்டு உடனடியாக இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் அமைத்து புதிதாக சுற்றுச் சுவர் அமைத்து விளக்கு எரிய ஆவன செய்து தர வேண்டும்" என அந்த கடிதத்தில் கோரிக்கையாக குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory