» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்.11 விடுமுறை : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 9:18:03 PM (IST)
பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 11 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரையறுக்கப்பட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் திருநாள் அன்று பொதுமக்கள் குல தெய்வ வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது. நடப்பு ஆண்டு 11.04.2025 அன்று (வெள்ளிக் கிழமை) பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்பட உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் இந்நன்னாளில் குலதெய்வ வழிபாட்டிற்கு வரையறுக்கப்பட்ட விடுப்பு வழங்கக்கோரும் பட்சத்தில் எவ்வித மறுப்புமின்றி விடுப்பு வழங்கிட அனைத்துதுறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மேற்குறிப்பிட்ட நாளில் தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி/கல்லூரி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தவிர இதர பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு கோரும் பட்சத்தில் எவ்வித மறுப்புமின்றி விடுப்பு வழங்கிடவும் அறிவுறுத்தப்படுகிறது.
மக்கள் கருத்து
TsundersinghApr 10, 2025 - 03:38:52 PM | Posted IP 104.2*****
விடுதலைத்திருநாள்,
குடியரசுத்திருநாள்
இவைகளுக்குமட்டுமே
பொதுவிடுமுறைஅளிக்க
வேண்டும். மதம்தொடர்பாகபொதுவிடுமுறைஅளிக்கக்
கூடாது. தேவைப்படுவோர்
விடுப்புஎடுக்க அனுமதி
வழங்கிடவேண்டும். இதுவே
மக்களுக்குநற்பயன்நல்கும்.
மக்களைஏமாற்றவேஆட்சியாளர்கள்
விடுப்புஅளிக்கின்றனர்.
AnuApr 10, 2025 - 10:16:13 AM | Posted IP 172.7*****
தனியார் நிறுவன விடுமுறை கொடுக்கவேண்டும் ஐயா. நன்கொடைகள் சிறப்பாக பங்கேற்ற வேண்டும் ஐயா.
ஜெயராமன்Apr 10, 2025 - 06:59:57 AM | Posted IP 162.1*****
இந்துக்கள் பண்டிகை 15நாள் விடுமுறை.இஸ்லாமியர் பண்டிகை 8நாள் கிறிஸ்தவர்கள் பண்டிகை 7நாள் இதர மத பண்டிகை 5நாள் மழைக்கால விடுமுறை 5நாள் இப்படியே விடுமுறை கொடுத்தால் நாடு எங்கே உருப்படும் இதில் ஆண்டிற்கு 12 நாட்கள் சிறப்பு விடுமுறை வேறு .மதம் சம்பந்தமான விடுமுறையை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் விடுமுறை வழங்க வேண்டும்.ஒரு மதத்தவர் பண்டிகையை இன்னொரு மதக் காரர்கள் கொண்டாடுவது இல்லை.பின்னர் ஏன் மொத்தமாக விடுமுறை வழங்க வேண்டும்.சிறப்பு விடுமுறை 12 நாட்கள் போல் மேலும் 10 நாட்கள் விடுமுறை அதை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்துக்கொள்ளவேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும்.விடுமுறையை அதிகப்படுத்தும் போது நாட்டின் வளர்ச்சி தடைபடும்.இதை தடுக்க விடுமுறையை குறைக்க வேண்டும்.
தமிழன்Apr 9, 2025 - 12:13:44 PM | Posted IP 104.2*****
குலதெய்வ வழிபாட்டிற்கு சிறந்த நாள் பங்குனி உத்திரம். இந்த நாளில் விடுமுறை இல்லாமல் தவித்த மக்கள் அனைவருக்கும் உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாடு அரசு இந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.
பொதுஜனம்Apr 9, 2025 - 09:04:16 AM | Posted IP 172.7*****
This is not a holiday.. RL RELIGIOUS HOLIDAY for staff .. Nellai only sanction local holiday
சண்முகம்Apr 9, 2025 - 08:51:38 AM | Posted IP 162.1*****
அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழர் பண்டிகை விழாக்களான தை பொங்கல் தை பூசம் தை அமாவாசை மாசி மகம் சில ராத்திரி பங்குனி உத்திரம் , சித்திரை முதல் நாள் வைகாசி விசாகம் ஆடி அமாவாசை புரட்டாசி அமாவாசை கார்த்திகை ஒளிச்சுடர் விழா மட்டுமே அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவித்தும் கூடுதலாக பணியாளர்களுக்கு விழாக்கால விடுமுறையாக ஐந்து நாட்களும் மேற்படி விடுப்பு நாட்களிலில் பணிபுரிந்து விருப்ப மத திருவிழா சமன் செய்யும் விடுமுறை அமல்படுத்த வேண்டும்.
சுதாApr 8, 2025 - 11:22:40 PM | Posted IP 162.1*****
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லே இருந்திருக்கலாம் 💯
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











மா கருப்பசாமிApr 10, 2025 - 10:08:38 PM | Posted IP 104.2*****