» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு : கொள்ளையன் கைது!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 11:35:35 AM (IST)
தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர், குமரன் நகரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் மனைவி ரத்தினம்மாள் (64). இந்த தம்பதியர் கடந்த மாதம் 23ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர் சென்று விட்டனர். பின்னர் 1ஆம் தேதி ஊர் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் ரத்தினம்மாள் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், தூத்துக்குடி சுந்தரவேல் புரம் 9வது தெருவை சேர்ந்த முனியசாமி மகன் முருகன் என்ற கட்ட முருகன் (40) என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகையை மீட்டனர். கைது செய்யப்பட்ட முருகன் மீது தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி உள்பட பல காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மிளகாய் வத்தலுக்கு ரூ.25 ஆயிரம் ஆதார விலை: தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:16:16 AM (IST)

பைக் சக்கரத்தில் சேலை சிக்கி விபத்து: பெண் பலி!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:11:28 AM (IST)

பஸ் நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நிற்க நடவடிக்கை: ஆட்சியரிடம் சமக கோரிக்கை!
திங்கள் 7, ஏப்ரல் 2025 9:25:32 PM (IST)

ஹோட்டல் கழிவு நீர் தொட்டியில் விழுந்த குழந்தை : தூத்துக்குடியில் பரபரப்பு!
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:44:29 PM (IST)

மகாவீர் ஜெயந்தி விழா: ஏப்.10ல் டாஸ்மாக் கடகளை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:33:52 PM (IST)

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:26:59 PM (IST)
