» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிரதமர் பாம்பன் வருகை: தூத்துக்குடி கடல் பகுதியில் போலீஸ் ரோந்து பணி தீவிரம்!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:17:57 AM (IST)
பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் வருகையையொட்டி தூத்துக்குடி கடல் பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து 6-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனுக்கு வருகிறார். இதனை தொடர்ந்து கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன் பேரில் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் படகுகளில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும்படியாக படகுகள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்கின்றனர். அதே போன்று தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்கு சென்றும் ஆய்வு செய்து வருகின்றனர். தீவுகளில் சந்தேகப்படும்படியாக நடமாட்டங்கள் உள்ளதா என்று தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அதே போன்று கடலோர கிராம மக்களை சந்தித்து சந்தேகப்படும்படியான நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய திறனாய்வு தேர்வில் நாசரேத் பள்ளி மாணவர் மாவட்டத்தில் முதல் இடம்!
புதன் 16, ஏப்ரல் 2025 5:49:35 PM (IST)

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் : திருச்செந்தூர் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு!
புதன் 16, ஏப்ரல் 2025 5:39:33 PM (IST)

சோனியா, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை : மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
புதன் 16, ஏப்ரல் 2025 5:28:01 PM (IST)

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தில் மாற்றம் : அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு
புதன் 16, ஏப்ரல் 2025 4:24:31 PM (IST)

தூத்துக்குடியில் டேக்வாண்டோ பயிற்சியாளர் பணி : விண்ணப்பங்கள் வரவேற்பு
புதன் 16, ஏப்ரல் 2025 3:26:09 PM (IST)

விளையாட்டு மைதானம் பணிகளை மேயர் ஆய்வு
புதன் 16, ஏப்ரல் 2025 3:10:59 PM (IST)
