» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டிற்குள் புகுந்த 6 அடி கட்டு விரியன் பாம்பு பிடிபட்டது: தூத்துக்குடியில் பரபரப்பு!

புதன் 16, ஏப்ரல் 2025 12:00:19 PM (IST)



தூத்துக்குடியில் துறைமுக சபை உறுப்பினர் வீட்டிற்குள் நுழைந்த 6 அடி நீள கட்டு விரியன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் தேவி நகரில் வசிப்பவர் சத்திய நாராயணன். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் துறைமுக சபை உறுப்பினராக உள்ளார். நேற்று முன்தினம் இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது உஷ் உஷ் என்று சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து சத்யநாராயணன் வீட்டுக்குள் பார்த்தபோது டைனிங் ஹால் அறையில் ஒரு பாம்பு பதுங்கி இருப்பது தெரியவந்தது. தூத்துக்குடி துறைமுக தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார் 

தீயணைப்பு அலுவலர் மற்றும் பாம்பு பிடி வீரர் ஜிஎம் பாட்ஷா தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று சுமார் 20 நிமிடம் போராடி பாம்பை உயிருடன் பிடித்தனர். இந்த பாம்பு 6 அடி நீளம் இருந்தது. கட்டுவிரியன் வகையை சேர்ந்தது என்றும் விஷ தன்மை உள்ளது என்றும் தெரியவந்தது. பின்னர் அந்த பாம்பை காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர். பாம்பை உடனடியாக பிடித்து குடும்பத்தினரின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு துறை துறைமுக சபை உறுப்பினர் சத்யநாராயணன் நன்றி தெரிவித்தார்.


மக்கள் கருத்து

Aruna RajeeApr 18, 2025 - 12:58:58 PM | Posted IP 172.7*****

சாரை பாம்பு சார் அது

JJRINApr 17, 2025 - 04:39:30 PM | Posted IP 162.1*****

எந்த நாட்டில் கட்டு விரியன் ஆறடி நீளம் இருக்கும் என்பதை முதலில் சொல்லுங்கள்! 😂 சாரைப்பாம்புக்கும் கட்டுவிரியனுக்கும் வித்தியாசத்தை அறிந்த பின்னர் செய்தி வெளியிடுங்கள்.

RatsApr 17, 2025 - 11:20:05 AM | Posted IP 172.7*****

Adhu Ratsnake

அடேய்Apr 16, 2025 - 12:29:16 PM | Posted IP 172.7*****

அதை காட்டுப்பகுதியில் விட்டால் மீண்டும் உள்ளே வந்துடும்ல,நம்ம ஊருல யாராச்சும் சீனா காரர்களை கண்டால் கொடுத்து விடுங்க, பாம்பு கறி சூப் போட்டு குடித்துவிடுவார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory