» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் டேக்வாண்டோ பயிற்சியாளர் பணி : விண்ணப்பங்கள் வரவேற்பு
புதன் 16, ஏப்ரல் 2025 3:26:09 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தில் "SDAT- ஸ்டார் அகாடமி டேக்வாண்டோ பயிற்சியாளர் பணி மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டார் விளையாட்டு பயிற்சி மையத்தின் கீழ் டேக்வாண்டோ விளையாட்டானது தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இவ்விளையாட்டு பயிற்சி மையத்துக்கு டேக்வாண்டோ பயிற்றுநர் பதவிக்கான விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்க அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். பயிற்றுநருக்கான அதிகபட்ச வயது வரம்பு 50. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டரங்க அலுவலக முகவரியில் 21.04.2025 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் உடல் தகுதித்தேர்வு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் 25.04.2025 அன்று நடைபெறும். நேர்முகத் தேர்வு அன்று உரிய அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வருதல் வேண்டும். இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப்பணியோ கோர இயலாது.
மேலும், விளையாட்டு பயிற்சி மையத்தில் டேக்வாண்டோ பயிற்சி மேற்கொள்ள விருப்பமுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது முதல் 21 வயது வரை உள்ள வீரர், வீராங்கனைகள் இருபாலரும் பங்கேற்கலாம். இதற்கான உடல் தகுதி தேர்வு வருகிற 28.04.2025 தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. உடல் தகுதி தேர்வுக்கு பங்கேற்க வருபவர்கள் ஆதார் அட்டை, பிறப்புச்சான்றிதழ், பள்ளி கல்லூரியிலிருந்து பெறப்பட்ட Bonafide சான்றிதழ், புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி, தொலைபேசி எண்:0461 2321149, தொலைபேசி எண்:7401703508 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










