» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தில் மாற்றம் : அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு
புதன் 16, ஏப்ரல் 2025 4:24:31 PM (IST)
வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மகளிர் உரிமைத் துறை, வீட்டு மனை பட்டா, விடியல் பயணம் என்று பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். மேலும், புதுமைப்பெண் திட்டத்திற்கு இதுவரை 721 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி சீருடைகள் தைக்க தையல் கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எடை குறைவாக உள்ள 92 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு அந்த குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர், குழந்தைகள் நல மையங்கள் எல்லாம் ஸ்மார்ட் மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது.
காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரித்து, குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளனர். வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் அரசின் காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










