» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் : திருச்செந்தூர் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு!
புதன் 16, ஏப்ரல் 2025 5:39:33 PM (IST)

"உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் களஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தொடங்கப்பட்ட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இன்று(16.04.2025) திருச்செந்தூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கள ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி திருச்செந்தூர் வட்டம், நல்லூர் ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2017-18 திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்போது ஊரகவளர்ச்சி முகமையின் மூலம் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும், நல்லூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் பாடங்களில் இருந்து கேள்விகளையும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்து பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து, வீரமாணிக்கம் ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் பயனாளி செல்வகுமார் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ள பவர் டிரில்லர் இயந்திரத்தின் செயல்பாடுகளையும், அம்மன்புரம் கண்மாயில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்தின் மூலம் தெற்கு பிரதான கால்வாயில் ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளது குறித்தும், கானம் பேரூராட்சியில் உள்ள தூலுகன் மற்றும் உபகால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும், பள்ளிப்பத்து ஊராட்சி பூச்சிக்காடு கிராமத்தில் ரூ.18.42 இலட்சம் மதிப்பீட்டில் 30000லி கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கட்டுமானப் பணிகளையும், ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தானிய
சேமிப்பு கிட்டங்கியின் கட்டுமானப் பணிகளையும், தேரிக்குடியிருப்பிலுள்ள அங்கன்வாடி மையம் மற்றும் அரசு துணை சுகாதார நிலையம் ஆகியவற்றையும், காயாமொழி ஊராட்சியில் ரூ.34.65 இலட்சம் மதிப்பீட்டில் தேரிக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறைகளின் கட்டுமானப் பணிகளையும், செம்மரிக்குளம் ஊராட்சியில் வருவாய்துறையின் மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினையும், மெய்ஞானபுரம் ஊராட்சியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிராமச் செயலகக் கட்டிடம் மற்றும் சடையனேரி கண்மாயில் கட்டப்படவுள்ள தடுப்பணை குறித்தும், உடன்குடி பேரூராட்சி சார்பாதிவாளர் அலுவலகத்தினையும் இந்த களஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அடுத்தபடியாக திருந்செந்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 20 பயனாளிகளுக்கு கணிணிப் பட்டாக்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து திருச்செந்தூர் வட்டத்தைச் சார்ந்த 685 பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர், திருச்செந்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுடன் முற்பகலில் மேற்கொண்ட களப்பயணங்கள், அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டறிந்து மற்றும் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் உள்ளவை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி இரா.ஜஸ்வர்யா மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவீந்திரன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், திருச்செந்தூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










