» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரவு நேரத்தில் மின் அழுத்த குறைபாடு: மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதி!

வியாழன் 3, ஏப்ரல் 2025 3:28:50 PM (IST)



தூத்துக்குடி அருகே எப்போதும் வென்றான் கிராமத்தில் இரவு நேரத்தில் மின் அழுத்தம் குறைந்து விடுவதால் பொதுமக்கள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். 

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எப்போதும் வென்றான் கிராமத்தில் விவசாயத்தை மட்டும் நம்பி சுமார் 2000 குடும்பங்கள்  வாழ்ந்து வருகின்றனர்.  இந்த கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் 4 இடங்களில் மும்முனை டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தியது. டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப்பட்டு சில மாதங்கள் ஆனபோதும் இதுவரை மும்முனை மின்சாரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படவில்லை. 

இதனால் இரவு நேரத்தில் ஏழு மணிக்கு பிறகு 10 மணி வரை கிராமம் முழுவதும் குறைந்த மின்னழுத்தம் ஆகி மின்விளக்குகள் அணைந்து விடுகிறது. வெளிச்சம் குறைந்து விடுகிறது. அல்லது விட்டு விட்டு எரிகிறது‌. கோடை  வெப்பத்தின் தாக்கத்தில் மக்கள் சிக்கியிருக்கும் நிலையில் காற்றாடியும் நின்று விடுகிறது.  அல்லது குறைவான வேகத்தில் சுற்றுகிறது. 

இதனால் பொதுமக்கள் சிரமப்படுவதோடு மட்டுமின்றி 10 ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவ மாணவிகளும் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education



New Shape Tailors





Thoothukudi Business Directory