» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரிவினை வாதத்தை தூண்டும் மாநில சுயாட்சி தேவையில்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி!

புதன் 16, ஏப்ரல் 2025 10:25:51 AM (IST)



பிரிவினை வாதத்தை தூண்டும் மாநில சுயாட்சி நமக்குத் தேவையில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் 255வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்த போது தமிழகத்தில் இருந்து வரும் பல கடிதத்தில் கையெழுத்து ஆங்கிலத்தில் உள்ளது என்று தெரிவித்தார். அதன் எதிரொலியாக இன்று தமிழில் மட்டுமே அரசாணை வெளியிடப்படும். தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

மாநில உரிமைகள் பறிக்கக்கூடாது என்பதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனால், மாநில சுயாட்சி என்பது பிரிவினை வாதத்தை தூண்டும். மாநில சுயாட்சி என்பது நமக்குத் தேவையில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை இதை நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேன். மக்களுக்கு காவல்துறையை பார்த்து பயம் இல்லை.

முன்பு அம்மா அரசு இருக்கும் போது காவல்துறை மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். இப்போது  காவல் துறையின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர், போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது, டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளது இதையெல்லாம் மாற்றுவதற்கு பதிலாக  மாநில சுயாட்சி என்று மக்களை திசை திருப்புகின்றனர் என்று தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் மாநிலபொதுச் செயலாலர் பொன் பாலகணபதி, தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்ட தலைவர் சரவண கிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்ட தலைவர்கள் முத்துபலவேசம், தமிழ்செல்வன் மாவட்ட பார்வையாளர் நீலமுரளியாதவ், வர்த்தக பிரிவு மாநில தலைவர் ராஜகண்ணன், தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன், அய்யாச்சாமி, கன்யாகுமரி மாவட்ட தலைவர்கள் கோபக்குமார், சுரேஷ், விருதுநகர் மாவட்ட தலைவர்கள் பாண்டுரங்கன், ராஜா  உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory