» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இரத்ததான அமைப்புகளுக்கு விருது : நகர காவல் கண்காணிப்பாளர் த.மதன் வழங்கினார்

புதன் 16, ஏப்ரல் 2025 11:08:54 AM (IST)



தூத்துக்குடியில் இரத்ததான சேவையில் முழுமையாக செயல்பட்டு வருகின்ற இரத்ததான அமைப்புகளுக்கு டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பாக ஏஎஸ்பி மதன் விருது வழங்கி கௌரவித்தார். 

அறக்கட்டளை சேர்மன் விஜயராஜன் தலைமை வகித்தார். நவராஜ், சுரேஷ் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (ஓய்வு) டாக்டர் ராஜன் அம்பேத்கர் படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மருத்துவக்கல்லூரி முதல்வர் குருதி கொடையாளர்களுக்கு இரத்ததான விழிப்புணர்வு பதிவுகளை சிறப்புரையாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து இம்முகாம் சிறப்புடன் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமானோர் பங்கேற்று இரத்ததானம் செய்தனர். தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்தவங்கி மருத்துவ அதிகாரி சாந்தி தலைமையிலான செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இரத்ததான பணிகளை முழுமையாக மேற்கொண்டு இருந்தனர். காலை 10 மணியளவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் துவக்கி வைத்தார். 

இந்நிகழ்வில் தூத்துக்குடி நகர காவல் கண்காணிப்பாளர் த.மதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரத்ததான சேவையில் முழுமையாக செயல்பட்டு வருகின்ற 15 இரத்ததான அமைப்புகளுக்கு 2024 to 2025 சாதனையாளர்களுக்கான அம்பேத்கர் விருதுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். உயிர்காக்கும் உன்னத சேவையில் இரத்ததானம் செய்த குருதி கொடையாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு உங்கள் சேவை தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

மேலும் நிகழ்ச்சியில் காமராஜ் (Chief civil Surgeon. Chennai), வேல்ராஜ் (காவல் உதவி ஆய்வாளர். தூத்துக்குடி), லிங்கேஸ்வரன் (சிர்க்கோனியம் காம்ப்ளக்ஸ். இந்திய அரசுத்துறை), ஸ்டீபன் ஜெபராஜ் (நந்தமிழர் தொழிலாளர் நலசங்கம்) ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 
இந்நிகழ்வில் அம்பேத்கர் அறக்கட்டளை நிர்வாகிகளான தாமோதரன், பிரபாகரன், சரவணன், ஜெயகீதன், சமுத்திரம், மதிவாணன், முருகன், செல்வவிநாயகம் மற்றும் இளையவேந்தன் இரத்ததான அறக்கட்டளை நிர்வாகிகள், இரட்சண்யா செங்குருதி இயக்க நிர்வாகிகள், Being Human சமூகநல அறக்கட்டளை நிர்வாகிகள் இம்முகாமை சிறப்புடன் நடத்தியுள்ளனர். 

இம்முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பாக அம்பேத்கர் வரலாறு மற்றும் பொன்மொழிகள் அடங்கிய புத்தகங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இறுதியாக அம்பேத்கர் அறக்கட்டளை நிர்வாக செயலாளர் ராஜன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory