» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிப்பு : ரூ.18,500 அபராதம்
வியாழன் 3, ஏப்ரல் 2025 7:51:03 AM (IST)
தூத்துக்குடியில் உரிய அனுமதியின்றி சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிக்க முயன்ற வீட்டின் உரிமையாளருக்கு மாநகராட்சி சாா்பில் ரூ.18,500 அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி ஆசிரியா் காலனியைச் சோ்ந்தவா் முனியசாமி. இவா் வீட்டுக்கு மாநகராட்சி சாா்பில் புதிதாக குடிநீா் குழாய் போடப்பட்டு உள்ளது. இதை இவா் மாநகராட்சி அனுமதி பெறாமல் சாலையை உடைத்து குழாய் பதித்து வீட்டுக்குள் கொண்டு செல்ல முயன்றாராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு மண்டல உதவி செயற்பொறியாளா் இா்வின், இளநிலை பொறியாளா் துா்காதேவி தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று பணிகளை தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து குழாய் பதிக்க உதவியதாக ஒப்பந்த ஊழியா் ஒருவா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.
மேலும் கழிவுநீா் கால்வாய், மற்றும் சாலையை சேதப்படுத்தியதாக அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.18 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையிலும் புகாா் அளிக்கப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் பிரதமர் மோடி அறிவிப்பாரா? பயணிகள் கோரிக்கை
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 10:44:42 AM (IST)

பிரதமரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 10:39:55 AM (IST)

வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 10:30:41 AM (IST)

வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கல்: வியாபாரி கைது!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 9:11:49 AM (IST)

தூத்துக்குடியில் மீன் விலை குறைந்தது: வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 8:58:09 AM (IST)

சிறுவனைத் தாக்கி கொலை மிரட்டல்: டிரைவர் கைது!
சனி 5, ஏப்ரல் 2025 8:28:56 PM (IST)
