» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை : விரிவுரையாளர் மீது புகார்
புதன் 2, ஏப்ரல் 2025 5:12:31 PM (IST)
எட்டயபுரம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிக்கு விரிவுரையாளர் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம, எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 292 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 121 மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 59 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த கல்லூரியில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமெண்டேஷன், கம்ப்யூட்டர், கார்மெண்ட் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. இக்கல்லூரியில் கார்மெண்ட் டெக்னாலஜி பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவிகள் 3பேர் தங்களுக்கு மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர் மதன்குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கல்லூரி முதல்வர் பேபி லதாவிடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் பேபிலதா கல்லூரி பெண்கள் பாதுகாப்பு கமிட்டியிடம் அந்த புகாரை கொடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதனிடையே அந்த கமிட்டியினார் புகார் அளித்த மாணவிகளை அழைத்து விசாரித்தபோது அந்த மாணவிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கவனத்துக்கு சென்றதை தொடர்ந்து போலீசார் பாலிடெக்னிக் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து கல்லூரி முதல்வர் பேபி லதாவிடம் கேட்டபோது.... புகார் வந்திருப்பது உண்மைதான். பெண்கள் பாதுகாப்பு கமிட்டி விசாரித்துக் கொண்டிருக்கிறது. விசாரணை அறிக்கை கிடைத்த பிறகுதான் எதையும் தெளிவாக சொல்ல முடியும் என்றார். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவியை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
சனி 5, ஏப்ரல் 2025 11:39:59 AM (IST)

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: தாய்-மகன் பரிதாப சாவு!
சனி 5, ஏப்ரல் 2025 10:47:32 AM (IST)

தூத்துக்குடியில் மனைவியை தாக்கிய கணவர் கைது!
சனி 5, ஏப்ரல் 2025 10:31:55 AM (IST)

தாய், மகள் கொலை வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!!
சனி 5, ஏப்ரல் 2025 10:25:34 AM (IST)

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 5 ஆண்டு சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 5, ஏப்ரல் 2025 10:20:11 AM (IST)

ஆலந்தலை திருத்தலத்தில் சிலுவை பாதை வழிபாடு
சனி 5, ஏப்ரல் 2025 10:13:58 AM (IST)

RanjaniApr 2, 2025 - 06:47:38 PM | Posted IP 104.2*****