» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மர்காஷிஸ் பள்ளியில் நன்னெறி வாழ்க்கைக் கல்வி நிகழ்ச்சி
திங்கள் 31, மார்ச் 2025 11:00:52 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உடற்கல்வி, நல்லொழுக்கம் மற்றும் நல்வாழ்வு என்ற தலைப்பில் நன்னெறி வாழ்க்கைக்கல்வி நிகழ்ச்சி நடந்தது.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உடற்கல்வி, நல்லொழுக்கம் மற்றும் நல்வாழ்வு என்ற தலைப்பில் நன்னெறி வாழ்க்கைக்கல்வி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். பள்ளியின் முன்னாள் மாணவரும், தனியார் நிறுவன மனித வள மேம்பாட்டு அதிகாரியுமான கமலேஷ் முன்னிலை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார்.
சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியக இயக்குனர் சத்தியகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், மாணவர்கள் விளையாட்டுக்கும், கல்விக்கும் முக்கியத்துவம் தர வேண்டும், பொறுமை, கடின உழைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும், தோல்வியை கண்டு துவண்டு போகக்கூடாது, நாள்தோறும் ஏதேனும் ஒரு விளையாட்டு பயிற்சியில் ஈடுபட வேண்டும், நல்லொழுக்கம் உடையவர்களாகவும், நன்னெறியுடன் கூடிய வாழ்க்கை வாழ்ந்து சமுதாயத்திற்கு பயன் தருபவர்களாகவும் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழ் ஆசிரியர் எட்வின் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வசுந்தர் கணினி அறிவியல் ஆசிரியர் பொன்தாஸ், அறிவியல் ஆசிரியர் ஜென்னிங்ஸ் காமராஜ் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காட்டு பகுதியில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:15:18 AM (IST)

சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிப்பு : ரூ.18,500 அபராதம்
வியாழன் 3, ஏப்ரல் 2025 7:51:03 AM (IST)

தூத்துக்குடியில் பொது இடங்களில் நாய்களுக்கு உணவு அளித்தால் நடவடிக்கை: மேயா் எச்சரிக்கை
வியாழன் 3, ஏப்ரல் 2025 7:45:01 AM (IST)

மின்சார வாரியம் சார்பாக ஏப்.5ல் சிறப்பு முகாம்: பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு!
புதன் 2, ஏப்ரல் 2025 9:26:29 PM (IST)

தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் : வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு
புதன் 2, ஏப்ரல் 2025 9:12:57 PM (IST)

அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
புதன் 2, ஏப்ரல் 2025 8:07:24 PM (IST)
