» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காட்டு பகுதியில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:15:18 AM (IST)
கழுகுமலை அருகே காட்டு பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த வாலிபர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை - கயத்தாறு சாலையில் பாண்டி கோவில் அருகே மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கழுகுமலை போலீசார் விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில் அவர், கழுகுமலை அருகே உள்ள நாயக்கர்பட்டி மாடசாமி மகன் காளிதாஸ் (33) என்பது தெரிய வந்தது.
திருமணமாகாத இவர், டவர் லைன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததுள்ளார். இறந்து சுமார் 4 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடலை பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 7:52:42 PM (IST)

முகநூலில் அறிமுகமாகி ரூ.34 லட்சம் மோசடி: கேரள தம்பதி கைது!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:59:00 PM (IST)

தூத்துக்குடி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:51:30 PM (IST)

தூத்துக்குடி - வேளாங்கண்ணி பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:45:30 PM (IST)

ஆத்தூரில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:30:12 PM (IST)

நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி: ஆட்சியர் க.இளம்பகவத் தொடங்கி வைத்து பங்கேற்றார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:25:08 PM (IST)
