» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தபால்காரர் மீது தாக்குதல் : பைக் உடைப்பு வாலிபர் கைது!
திங்கள் 31, மார்ச் 2025 10:53:25 AM (IST)
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற தபால்காரரை தாக்கி அவரது பைக்கை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் 2வது தெருவில் வசிப்பவர் சுப்பையா இவரது மகன் பேச்சிமுத்து (76). இவர் தபால்காரராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமான வீட்டில் தூத்துக்குடி தாளமுத்து நகர் பெரிய செல்வம் நகரை சேர்ந்த தம்பி ராஜ் மகன் மணிமுத்து (35) என்பவர் வாடகைக்கு குடியிருந்தாராம். பின்னர் அவர் வீட்டை காலி செய்த போது அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்டபோது பேச்சிமுத்து இந்த வீட்டுக்கு புதிதாக வருபவர்களிடம் அட்வான்ஸ் வாங்கி உங்களுக்கு தருகிறேன் என்று கூறினாராம்.
அதற்கு மணிமுத்து நான் வீட்டை காலி செய்தவுடன் நீங்கள் எனக்கு பணத்தை தந்து விட வேண்டும் என்று கூறினாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மணி முத்து பேச்சிமுத்துவை கல்லால் தாக்கி அருகில் இருந்த அவரது இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தினாராம். இதில் காயமடைந்த பேச்சிமுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து மணிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்சார வாரியம் சார்பாக ஏப்.5ல் சிறப்பு முகாம்: பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு!
புதன் 2, ஏப்ரல் 2025 9:26:29 PM (IST)

தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் : வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு
புதன் 2, ஏப்ரல் 2025 9:12:57 PM (IST)

அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
புதன் 2, ஏப்ரல் 2025 8:07:24 PM (IST)

ஐஸ் வியாபாரி மீது தாக்குதல்: இளைஞர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 8:02:42 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டில் 8 அடி உயர கஞ்சா செடி வளர்ப்பு : போலீஸ் விசாரணை!
புதன் 2, ஏப்ரல் 2025 5:53:56 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்.11 உள்ளூர் விடுமுறை அறிவிக்க பக்தர்கள் கோரிக்கை!
புதன் 2, ஏப்ரல் 2025 5:46:08 PM (IST)
