» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்களில் நகைகள் திருடியவர் கைது: 21 கிராம் பொட்டு தாலிகள் மீட்பு

திங்கள் 31, மார்ச் 2025 8:12:50 AM (IST)

கயத்தாறு அருகே கோவில்களில் நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 கிராம் பொட்டு தாலிகள் மீட்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள செட்டிகுறிச்சி பஞ்சாயத்து தெற்கு கோனார் கோட்டை கிராமத்தில் அம்மன் கோவிலில் கடந்த மாதம் சம்பவத்தன்று நள்ளிரவில் மர்மநபர் புகுந்து, அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 16 கிராம் பொட்டுத்தாலிகளை மர்ம நபர் திருடி சென்றார். 

அடுத்த சில நாட்களில் திருமங்களக்குறிச்சி கிராமத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ள காளியம்மன், மாரியம்மன், துர்க்கை ஆகிய 3 கோவில்களில் மர்ம நபர் புகுந்து ஒரு பவுன் மதிப்புள்ள 8 பொட்டுத்தாலிகளை திருடி ெசன்றார். மேலும், கோவிலில் இருந்த மணி மற்றும் உண்டியலை உடைத்து பணத்தையும் திருடி சென்றார். 

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், இந்த கோவில்களில் நகைகள், பணத்தை திருடியது நெல்லை பாளையங்கோட்டை உத்தமபாண்டியன்குளம் பகுதியைச் சேர்ந்த சுடலைத்தேவர் மகன் இசக்கிமுத்து என்ற இசக்கிபாண்டி (40) என்பது தெரிய வந்தது. 

அவரிடம் தெற்குகோனார் கோட்டை, திருமங்களக்குறிச்சி ஆகிய 2 கிராமங்களில் உள்ள மாரியம்மன், துர்க்கை அம்மன், காளியம்மன் கோவில்களில் திருடப்பட்ட 21கிராம் மதிப்புள்ள அம்மன்களின் பொட்டுத்தாலிகள் மீட்கப்பட்டது. தொடர்ந்து இசக்கி பாண்டியை போலீசார் கைது செய்து கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory