» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வெள்ளி 7, பிப்ரவரி 2025 7:54:54 PM (IST)



தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 
மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிதிநிலை அறிக்கையில் இடம்பெற செய்யாத மத்திய அரசைக் கண்டித்தும், விவசாயிகள் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையினை வழங்கிட கோரியும் தொழிலாளருக்கு குறைந்தபட்ச ஊதியம் 26,000 குறையாமல் நிர்ணயம் செய்யவும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அண்ணா நகர் 7வது தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு  ஐஎன்டியுசி மாநில தலைவர் பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக தொழிற்சங்க மாவட்டதலைவர் சுசி, ரவீந்திரன் செயலாளர் முருகன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் ராஜகோபாலன், செயலாளர் கருப்பசாமி, சிஐடியூ மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, செயலாளர் ரசல், ஏஐடியுசி மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், செயலாளர் லோகநாதன், ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் சகாயம் செயலாளர் சிவராமன் உள்பட 100க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து

IndianMar 27, 2025 - 12:49:47 PM | Posted IP 172.7*****

Don't have any issues with state Government?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory