» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா
புதன் 22, ஜனவரி 2025 3:07:21 PM (IST)
மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு வருகைபுரிந்த சிறப்பு விருந்தினர்களை உடற்கல்வ ஆசிரியை ஜேஸ்மின் ஏஞ்சல்குமாரி வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கால்பந்து அணி குறுவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட போட்டியில் முதலிடம் பிடித்து. மாநில போட்டிக்கு தகுதி பெற்றது. மாணவ மாணவிகள் மதுரையில் நடைபெற்ற மாநில போட்டியில் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழ்களை பள்ளியின் தாளாளர் . செல்வின் வழங்கினார். அதே போல் நம் பள்ளி மாணவ மாணவிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்தனர். இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை பள்ளியின் தலைமை ஆசரியை . ஜீலியட் ஜெயசீலி வழங்கினார்கள்.
அதேபோல் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவின் முடிவில் உடற்கல்வி ஆசிரியர் பிரைற்றன் ஜோயல் நன்றியுரை வழங்கினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றம் மாணவ, மாணவிகள் வெகுவாக பாராட்டினார்கள்.