» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
வெள்ளி 17, ஜனவரி 2025 4:02:32 PM (IST)
தூத்துக்குடியில் எம்.ஜி.ஆரின் 108-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக வர்த்தக அணி செயலாளர் சித செல்லப்பாண்டியன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் அதிமுக வர்த்தக அணி சார்பில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதுபோல் அண்ணா நகர் 7 வது தெரு டூவிபுரம் சந்திப்பு, அண்ணா நகர் 12 வது தெரு, பழைய மாநகராட்சி அலுவலகம், கோயில்பிள்ளை விளை, உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் எம்ஜிஆரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் திரு சந்தனம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால், வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ், மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.