» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விடுதியில் தங்கியிருந்த தனியார் நிறுவன ஊழியர் மரணம்: போலீஸ் விசாரணை

வெள்ளி 17, ஜனவரி 2025 11:49:46 AM (IST)

திருச்செந்தூர் விடுதியில் தங்கியிருந்த தனியார் நிறுவன ஊழியர் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவை வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் பகவதி ராஜா (34). இவர் அங்குள்ள, தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். குடும்ப பிரச்சனை காரணமாக 6 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால் பகவதி ராஜா அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர் திருச்செந்தூர் வந்துள்ளார். தெப்பக்குளம் தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியிருந்தார். நேற்று மாலை வரை அவரது அறை திறக்கப்படவில்லை. இதையடுத்து விடுதி மேலாளர் சென்று பார்த்தபோது அவர் படுக்கையறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து திருச்செந்தூர் தாலூகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கட்டது.  இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா? என போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors





Thoothukudi Business Directory