» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
வெள்ளி 17, ஜனவரி 2025 3:30:56 PM (IST)
துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாசரேத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (ஜன.18) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் 33/11 கிவோ நாசரேத் மற்றும் 33/11 கிவோ செம்மறிக்குளம் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.18) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, மூக்கப்பீறி, வெள்ளமடம், வாழையடி, உடையாா்குளம், பாட்டகரை, பிடாநோி, பிரகாசபுரம், வைத்தியலிங்கபுரம், அகப்பைகுளம், செம்பூர், வேலவன் காலனி, ஆதிநாதபுரம், மணல்குண்டு, எழுவரைமுக்கி, தோிப்பனை, மெஞ்ஞானபுரம், அணைத்தலை, செம்மறிக்குளம், மருதூர்கரை, வாலிவிளை, தாய்விளை, தோப்பூர், கல்விளை, பிள்ளைவிளை இராமசாமிபுரம், லெட்சுமிபுரம், மாணிக்கப்புரம், இராம சுப்பிரமணியபுரம், நங்கைமொழி, வாகைவிளை, மானாடு, செட்டிவிளை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.