» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாரதியார் வித்யாலயம் பள்ளியில் பொங்கல் விழா
திங்கள் 13, ஜனவரி 2025 8:16:16 PM (IST)
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தின் நடுவே சுற்றிலும் கரும்புகள் கட்டப்பட்டு அடுப்புகள் வைத்து அதில் வெண்கலப் பானையில் பள்ளி ஆசிரியர்கள் பொங்கல் வைத்தனர் மாணவ, மாணவியர்கள் வேஷ்டி, சட்டை, பாவாடை தாவணியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையில் உற்சாகமாக கலந்து கொண்டு பொங்கல் பொங்கி வரும் பொழுது ஒரே சமயத்தில் பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்
தொடர்ந்து மாணவ மாணவிகள் பங்கேற்ற உறியடித்தல் போட்டி, மியூசிக்கல் சேர் மாணவிகளுக்கான லெமன் ஸ்பூன், கோலப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாணவ மாணவிகள் நம்முடைய பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த விழா நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், பயிற்சி ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கரும்பு, சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.