» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தொழில்முனைவர் மேம்பாட்டு நிகழ்ச்சி

திங்கள் 13, ஜனவரி 2025 4:21:18 PM (IST)



தூத்துக்குடியில் லேர்னிங் லிங்க்ஸ் ஃபவுண்டேஷன், ஷெல் என்எக்ஸ்ப்ளோரர்ஸ், நிதி ஆயோக் மற்றும் அடல் இனோவேஷன் மிஷன் சார்பில் முதல் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. 

இப்பயிற்சியில் 17 அடல் டிங்கரிங் லேப் (ATL) பள்ளிகளைச் சேர்ந்த 31 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்களில் சிக்கல் தீர்க்கும் திறனையும் விமர்சன சிந்தனைகளையும் ஊக்குவிக்க, ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தில் இப்பயிற்சி நடைபெற்றது. பயிற்சி அமர்வில், ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு கல்வி முறைகளையும், அறிவியல் மாதிரிகளை உருவாக்குவதையும் கற்றுகொண்டனர். 

மேலும், டிங்கரிங் லேப்களை திறம்பட பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்றல் சூழல்களை உருவாக்க வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான முதல் அடிப்படை பயிற்சியாகவும், பள்ளிகளில் புதுமைத்திறனையும் விமர்சன சிந்தனையையும் வளர்க்கும் முக்கியமான முன்னேற்றமாகவும் அமைந்தது. இந்த நிகழ்வு, கல்வியில் புதுமை மற்றும் சவால்களை தீர்க்கும் திறனை மாணவர்களிடம் உருவாக்கும் நோக்கத்துடன், ஆசிரியர்களை செம்மைப்படுத்தும் ஒரு முதன்மை முயற்சியாக கருதப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory