» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் தமிழர் திருநாள் கொண்டாட்டம்
திங்கள் 13, ஜனவரி 2025 4:04:21 PM (IST)
தூத்துக்குடி வாகைகுளம் சென்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து தமிழர் திருநாளை கொண்டாடினர்.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜார்ஜ் கிளின்டன் தலைமை தாங்கினார். மாணவ மாணவியர் அனைவரும் தமிழர் பாரம்பரிய உடை அணிந்து கோலப்போட்டி, பானை உடைத்தல் கயிறு இழுத்தல் சிலம்பாட்டம் ஒயிலாட்டம் ஆடல் பாடல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். மேலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இவ்விழாவை பேராசிரியர் முத்துகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அதிகாரி விக்னேஷ் செய்திருந்தார்.