» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீன்பிடி படகில் சுற்றுலா சென்றால் கடும் நடவடிக்கை: எஸ்.பி., ஆல்பட் ஜான் எச்சரிக்கை

திங்கள் 13, ஜனவரி 2025 3:45:36 PM (IST)

காணும் பொங்கலையொட்டி மீன்பிடி படகில் சுற்றுலா சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி ஆல்பட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் ஆல்பட் ஜான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில், "காணும் பொங்கலை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் விதமாக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் பகுதியில் மட்டும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கானும் பொங்கலை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி படகில் சுற்றுலா சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதிக்கப்பட்ட  சுற்றுலா படகு  சேவையில் நிர்ணயிக்கப்பட்ட பயணிகளை  மட்டும் ஏற்றிச் செல்ல வேண்டும். கூடுதலாக ஆட்களை ஏற்றக்கூடாது. மாவட்டம் முழுவதும் 75 வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொதுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் கூட ஊர் மக்களே சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர். 

பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை உறுதியாக உள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். வன்முறை, சாதி பிரிவினையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். பைக் ரேஸில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்க்ள மீது போக்குவரத்து விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் நிரந்தரமாக காவலர்கள் நியமிக்கப்படுவர். புதன்கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி 2 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைவரும் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory