» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காரப்பேட்டை நாடார் ஆண்கள் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
செவ்வாய் 7, ஜனவரி 2025 5:09:28 PM (IST)
தூத்துக்குடியில் காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் - ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1996 ஆம் ஆண்டு ப்ளஸ் 2 படித்த மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு பரிசு கொடுத்து ஆசீர் பெற்றனர். தொடர்ந்து தாங்கள் படிக்கும் போது நடைபெற்ற நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்கள் தொடர்ந்து ஆசிரியர் ஒருவருக்கு நிகழ்வு நடைபெறும் நாளில் பிறந்த நாள் என்பதால் கேக் வெட்டி வாழ்த்து சொல்லி மகிழ்ந்தார்கள்.
தாங்கள் படித்த பள்ளியின் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கி அசத்தினார்கள். ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரி சட்டையில் காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1996 பாட்ஜ் ரீயூனியன் என்று எழுதப்பட்டிருந்தது. நிறைவாக அனைவருக்கும் தலைவாழை இலை போட்டு விருந்து வைத்து அசத்தினர்.