» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறினால் நடவடிக்கை: எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை

செவ்வாய் 31, டிசம்பர் 2024 8:52:14 AM (IST)

தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது போதையில் அத்துமீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொண்டாட்டங்களின் போது, இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து பைக் ரேஸ் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்படும். 

மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். ரோட்டில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் 'வீலிங்" செய்வது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் செல்வதும், பொது இடங்களில் நின்று மது அருந்திவிட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதனை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இரவில் மக்கள் அதிகம் செல்லும் பகுதிகளிலும், ஆலய பகுதிகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory