» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூா் கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை : அதிகாலை ஒரு மணிக்கு நடை திறப்பு!
செவ்வாய் 31, டிசம்பர் 2024 8:49:19 AM (IST)
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை (ஜன. 1) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (ஜன. 1) புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடா்ந்து, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.
புத்தாண்டையொட்டி, திருச்செந்தூா் கோயிலுக்கு சில நாள்களாகவே தென்காசி, திருநெல்வேலி, விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த விரதமிருந்த பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா்.