» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவியர் விடுதிக்குள் புகுந்து தகராறு: 2 சிறுவர்கள் கைது; சீர்திருத்த பள்ளியில் அடைப்பு!

செவ்வாய் 31, டிசம்பர் 2024 8:42:07 AM (IST)

கழுகுமலையில் மதுபோதையில் அரசு மாணவியர் விடுதிக்குள் புகுந்து மாணவிகளிடம் தகராறு செய்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை - கோவில்பட்டி மெயின் சாலையில் குமாரபுரம் ஊருக்கு அருகே அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி உள்ளது. இதில் கழுகுமலை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக சில பள்ளி மாணவிகள் தங்களது ஊர்களுக்கு சென்று விட்டனர். 

விடுதியில் தற்போது 35 மாணவிகள் தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கழுகுமலை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 16 வயது சிறுவர்கள் மது போதையில் மாணவியர் விடுதிக்குள் அத்து மீறி நுழைந்துள்ளனர். அங்கு இருந்த மாணவிகளிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கூச்சலிட்டதால், அந்த 2பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

இதுகுறித்து விடுதி பராமரிப்பாளரான ஆயா மாடத்தி (45) கழுகுமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கழுகுமலை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் என தெரிய வந்தது.

இதை தொடர்ந்து நேற்று அப்பகுதியில் பதுங்கி இருந்த அந்த 2 சிறுவர்களையும் கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், மாரிமுத்து மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட அந்த 2 பேரும் நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory