» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கன்னடியன் வெள்ளநீர் கால்வாய் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழச்சி!!
சனி 14, டிசம்பர் 2024 8:35:56 PM (IST)
விவசாயிகள் கோரிக்கையையேற்று மணிமுத்தாறு 3வது ரீச் கால்வாயில் கன்னடியன் வெள்ளநீர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்த வருவதையொட்டி மணிமுத்தாறு, பாபநாசம், தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கன்னடியன் வெள்ளநீர் கால்வாயில் 1700 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மழை நீர் அதிகளவு வீணாக கடலுக்கு செல்வதால் வெள்ளநீர் கால்வாய் மூலம் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை மணிமுத்தாறு 3வது ச் கால்வாயிலும் திறந்து விட வேணடும்.
இதன்மூலம் 3வது ரீச் கால்வாயை நமபியுள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள் என மணிமுத்தாறு 3வது ரீச் கால்வாய் விவசாயிகள் சங்க செயலாளர் முருகேசன் வலியுறுத்தினார். இதனையடுத்து நீர்வளத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து இன்று சனிக்கிழமை 3வது ரீச் கால்வாயில் 1500 கனஅடி தண்ணீர் திறந்து விட்டனர். இந்த தண்ணீர் மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிபட்டி, மீரான்குளம், வந்து பேய்க்குளம் பகுதி குளத்திற்கு வந்தடைந்தது.
இதனை வரவேற்று விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். வெள்ளநீர் அதிகமாக வந்துள்ளதையடுத்து அபாய எச்சரிக்கையையடுத்து ஆற்றில் இருந்து கடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இப்பகுதி குளங்களில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளதால் இன்னும் 1000 கன அடி தண்ணீர் இப்பகுதிக்கு திருப்பி விட வாய்ப்புள்ளது. ஆதலால் அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.