» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு

வியாழன் 26, டிசம்பர் 2024 1:00:01 PM (IST)



தூத்துக்குடியில் தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 29 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு முதலில் தூத்துக்குடி வருகிறார். அங்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியோ டைடல் பார்க் கட்டடத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து டிச.30 ஆம் தேதி காலை தூத்துக்குடியில் புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். 

இந்த நிலையில் தூத்துக்குடி திருச்செந்தூர் பிரதான சாலையில், நியோ டைடல் பார்க்  அமைந்துள்ள பகுதியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இதில் எம்எல்ஏக்கள் விளாத்திகுளம் மார்க்கண்டையன், ஓட்டப்பிடாரம் சண்முகையா, தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் அருண் குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

RoadDec 26, 2024 - 01:28:52 PM | Posted IP 172.7*****

Appadiye Thoothukudi to Tiruchendur saalayai seppanidungal...... pala maranakuligal ullathu...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

வியாழன் 26, டிசம்பர் 2024 11:10:18 AM (IST)

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory