» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி
வியாழன் 26, டிசம்பர் 2024 11:10:18 AM (IST)
தூத்துக்குடி அருகே லிப்ட் கேட்டு சென்றபோது மாேட்டார் பைக்கிலிருந்து தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை செந்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதமாணிக்கம் மகன் காமராஜ் (73), இவர் பைக்கில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தார். புதுக்கோட்டை பைபாஸ் ரோடு அருகே வரும்போது வேகத் தடையில் பைக் ஏறி இறங்கும் போது தர்மராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பயனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.