» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் விபத்து அபாயம் : தூத்துக்குடியில் வாகன ஓட்டிகள் அச்சம்!

வியாழன் 26, டிசம்பர் 2024 11:54:49 AM (IST)



தூத்துக்குடியில் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். 

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள மேம்பாலம் சுவர்களில் கண்கவர் வண்ண ஓவியங்கள் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அவ்வழியே செல்லும் வாகனங்களை அணுகு சாலை வழியாக செல்லுமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், அணுகு சாலையின் ஓரத்தில் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. 

இதனால் பஸ் போன்ற வாகனங்கள் செல்லும் போது அப்பகுதி முழுவதும் தூசு மண்டலமாக காணப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மற்ற வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும் 108 ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களும் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே விபத்து எதுவும் நடக்கும் முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்னர். 


மக்கள் கருத்து

அதுDec 26, 2024 - 02:14:05 PM | Posted IP 162.1*****

அனல் மின் ஊழியர்களுக்கு அறிவு இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

வியாழன் 26, டிசம்பர் 2024 11:10:18 AM (IST)

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory