» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மணல் சாலைகள் கல் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது: மேயர் தகவல்
வியாழன் 26, டிசம்பர் 2024 9:03:47 PM (IST)
தூத்துக்குடி மாநகரில் மணல் சாலைகள் கல் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன் முன்னிலையில், நடைபெற்றது. முகாமில் மேயர் பேசுகையில், "கோரம்பள்ளம் கண்காணிக்கப்பட்டதால் முள்ளக்காடு ஓடை அகலப்படுத்தப்பட்டதாலும் விவசாய நிலங்கள் உப்பளங்கள் நீர் பாதிப்பில் இருந்து சேதமில்லாமல் பாதுகாக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் சாலைகள் கல்ச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. மீதமுள்ள சாலைகள் வரும் நிதி ஆண்டில் போடப்படும். தமிழக முதல்வர் தூத்துக்குடி வருவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து நடந்து வருகிறது இவ்வாறு அவர் பேசினார்
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகர துணை பொறியாளர் சரவணன், செயற்பொறியாளர் ரங்கநாதன், மாநகர நகர் அலுவலர் வினோத் ராஜா, உதவி செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம், இளநிலை பொறியாளர்கள் பிரபாகரன் செல்வராஜ், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், வட்ட செயலாளர் பிரசாந்த் மாமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், முத்துமாரி, சரவணக்குமார், விஜயகுமார் பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, வைதேகி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி, மேயர் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ் ஜேஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
CHOLAN MookandiDec 27, 2024 - 04:59:48 AM | Posted IP 162.1*****