» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி இறந்த சோகம்: விவசாயி விஷம் குடித்து தற்கொலை!
வியாழன் 26, டிசம்பர் 2024 11:15:50 AM (IST)
குலசேகரன்பட்டினம் அருகே மனைவி இறந்த சோகத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள தேரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் மகாராஜா (65). கடந்த 50 நாட்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட்டாராம். இதனால் சோகத்தில் இருந்த அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து தனது தோட்டத்தில் வைத்து பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.