» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு : மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு!
வியாழன் 26, டிசம்பர் 2024 11:04:41 AM (IST)
தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்ற வாலிபரை தாக்கி செல்போன் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சுந்தரவேல் புரத்தை சேர்ந்தவர் ராமர் மகன் மாதவன் (26) இவர் நேற்று (25ஆம் தேதி) தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் பைக்கில் வந்த ஒரு மர்ம ஆசாமி அவரை கையால் தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்று விட்டார்.
இதன் மதிப்பு ரூ.10ஆயிரம் ஆகும். இதுகுறித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் மாதவன் புகார் அளித்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்து வீரப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.