» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பாதிப்புகள் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு!
சனி 14, டிசம்பர் 2024 5:35:07 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பாதிப்புகள் மற்றும் அணைகளின் நீர் மட்டம் உயர்வு குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருவதன் காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதை தொடர்ந்து சேர்வலாறு அணையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு இன்று (14.12.2024) ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சேர்வலாறு, காரையாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு நீர் வரத்து மற்றும் நீர் இருப்பு நீர் வெளியேற்றம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்து அணைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீரினால் பாதிக்கப்பட்டது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் இரண்டாவது நாளாக இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அதன்படி, இன்று முக்கூடல் ஆற்றுபாலத்திலிருந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளநீர் செல்வதையும், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் கிரியம்மாள்புரம், சக்திகுளம் கிராமத்திலும், வடக்கு வீரவநல்லூர்; பேரூராட்சி போன்ற இடங்களில் வாழைப்பயிர்கள் சேதமடைந்ததை குறித்தும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி மருதம்நகர் பகுதியில் வெள்ளநீர் சென்று சேதமடைந்ததை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்;; கனமழையினால் சேதமடைந்த 34 வீடுகளுக்கும் 1 பசு மாடு மற்றும் 1 கால்நடை வளர்ப்பிடம் என மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.3.10 இலட்சம் நிவாரண உதவித்தொகைக்கான காசோலையினை பாதிக்கப்பட்ட உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண்குராலா பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், உட்பட பலர் உடனிருந்தனர்.