» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத் ரயில் நிலையத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும் : பயணிகள் கோரிக்கை!
சனி 14, டிசம்பர் 2024 5:21:42 PM (IST)
நாசரேத் ரயில் நிலையத்தில் மழை, வெயில் பாதிக்காத வகையில் மேற்கூரை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை விடுத்துள்ளது இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் கடந்த 3 நாட்களாக பகுதிகளில் கார்மேகம் சூழ்ந்த நிலையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்நிலையில் நாசரேத் ரயில் நிலையத்தின் 1வது மற்றும் 2வது நடை மேடைகளின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் மேற்கூரை அமைக்கப்படாததால் ரயிலில் பயணம் செய்ய வரும் பயணிகள் மழையில் நனைந்தபடி பயணம் செய்கின்றனர். இதனால் பயணிகள் மழை காலத்தில் மழையில் நனைந்தபடியும், வெயில் காலத்தில் வெயிலில் காத்திருந்து ரயில் ஏறிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மதியம் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து 2 பிளாட்பாரத்தில் இறங்கினால் மழைக்காலம் மழையில் நனைந்து கொண்டே வரனும்.அதேபோல் வெயில் காலத்தில் ரயிலில் ஏறுவதற்கு காத்திருக்கும் போது மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட தென்னக ரயில்வே நிர்வாக அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொண்டு ரயில் பயணிகள் மழை மற்றும் வெயிலில் காலத்தில் சூழ்நிலை பாதிக்காத வகையில் நாசரேத் ரயில் நிலைய இரு நடைமேடைகளி லும் மேற்கூரை அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.