» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மழை பாதிப்புகள் கட்டுபாட்டு அறை: ஆட்சியர் ஆய்வு!
சனி 14, டிசம்பர் 2024 5:11:39 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுபாட்டு அறையை ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை தொடர்பாக ஏற்படும் பாதிப்புகள் மற்றும் குறைகளை தெரிவிக்க உதவி எண்களான (தொலைபேசி எண்: 0461-2340101, கட்டமில்லா தொலைபேசி எண்: 1077, அலைபேசி எண்: 8680800900, Whatsapp No:9384056221) அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆட்சியர் அலுவலகம் 2வது தளத்தில் 24மணி நேரமும் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் இன்று பார்வையிட்டார்.