» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ரயில்கள் மீளவிட்டானிலிருந்து இயக்கம்
சனி 14, டிசம்பர் 2024 5:09:50 PM (IST)
தொடர் மழை காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தொடர் மழை காரணமாக தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியிருப்பதால், தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. மேலும், திருநெல்வேலி தூத்துக்குடி பயணிகள் ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் மைசூர் எக்ஸ்பிரஸ், சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ், பாலக்காடு எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் இன்று 14ந் தேதியிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது.
மேலும், தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு புறப்பட்டுச் செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண்.06667, மணியாச்சி- தூத்துக்குடி வண்டி எண் 06672, தூத்துக்குடி-மணியாச்சி பயணிகள் ரயில் வண்டி எண்06847 ஆகிய மூன்று பயணிகள் ரயில்களும் மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக இரயில்வேயின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
KARNARAJDec 14, 2024 - 05:23:59 PM | Posted IP 172.7*****
LET US CONTINUE TO RUN FROM MEELVITTAN PERMANANTLY, TO AVOID CITY TRAFFIC PROBLEMS AND FREQUENT DISTURBANCES
சுந்தர்Dec 14, 2024 - 07:34:19 PM | Posted IP 162.1*****