» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புன்னக்காயல் பகுதியில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் : பொதுமக்கள் பாதிப்பு!

சனி 14, டிசம்பர் 2024 4:22:21 PM (IST)



தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடமான புன்னக்காயல் பகுதியில் பெரும்பாலான வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சுரந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு. 

தூத்துக்குடி மாவட்டம் உள்பட தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் மழை நீரின் அளவும் அதிக அளவு தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் சுமார் 70 ஆயிரம் கன அடி நீர் வரை வெளியேற்றப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றின் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தடுப்பணையாக விளங்கும் மருதூர் அணைக்கட்டில் இருந்து மட்டும் சுமார் 74 ஆயிரம் கன அடி நீர் தற்போது வரை வந்து கொண்டிருக்கிறது. இந்த தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் வங்கக்கடலில் கடைசியாக கடக்கும் இடம்தான் புன்னக்காயல்.

இந்த புன்னக்காயல் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீர் முழுவதும் இந்த புன்னக்காயல் வழியாக கடலில் கலந்து வருகிறது. தாமிரபரணி தண்ணீர் அதிகமாக வருவதால் புன்னக்காயல் ஊருக்குள் இந்த மழை வெள்ள நீர் புகுந்துள்ளது.

இந்த தண்ணீர் கலக்கும் இடத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் தற்போது தாமிரபரணி ஆற்றில் வந்து கொண்டிருக்கும் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. இதனால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை இந்த மழை நீர் சூழ்ந்து காணப்படுவதால் அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

வியாழன் 26, டிசம்பர் 2024 11:10:18 AM (IST)

Sponsored Ads

Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory